Advertisment

உயிருக்கு ஆபத்தாகும் புதிய சேலன்ஜ்... யாரும் முயற்சிக்க வேண்டாம் என வேண்டுகோள்...

இணையத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சேலன்ஜ் வைரலாகும். அந்த வகையில் தற்போது புதிய சேலன்ஜ் ஒன்று வைரலாகி வருகிறது.

Advertisment

vaccum challenge is getting viral in social media

டென் இயர் சேலன்ஜ், மோமோ, கிகி என பல சேலன்ஜ்களை தொடர்ந்து தற்போது 'வாக்கம் சேலன்ஜ்'. இதில் ஒரு பெரிய பிளாஸ்டிக் பையில் ஒருவர் அமர்ந்து கொண்ட உடன், வாக்கம் க்ளினரை வைத்து அந்த பைக்குள் இருக்கும் காற்றை ஒருவர் வெளியே எடுக்கிறார். இதனை அடுத்து பைக்குள் இருக்கும் நபரின் உடலை, அந்த பெரிய பிளாஸ்டிக் பை இறுக்குகிறது. சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை பலரும் இதனை செய்து அதன் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisment

இது குறித்து பேசியுள்ள சமூக ஆர்வலர்கள், இதனை செய்யும்போது சிலர் தங்கள் முகத்தை மூடுகின்றனர், அல்லது வாக்கம் கிளீனர் பயன்படுத்தும்போது பிளாஸ்டிக் பையானது முகத்தை மற்றும் கழுத்தை சுற்றி மூச்சு திணறல் ஏற்பட வைக்கிறது. எனவே இதனை யாரும் முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயலை கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

kiki challenge momo challenge VIRAL weird
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe