Advertisment

தொடரும் அடக்குமுறைகள்!!! நீதி கேட்டு பன்னாட்டு நீதிமன்றத்தை நாடிய உய்குர் இஸ்லாமியர்கள்...

uyghur muslim approach international court

சீனாவில் உய்குர் இஸ்லாமியர்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்து வரும் சூழலில், இது தொடர்பாக கிழக்கு துருக்கிஸ்தான் உள்ளிட்ட சில அமைப்புகள் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளன.

Advertisment

மத்திய ஆசியாவை அடித்தளமாக கொண்ட உய்குர் இஸ்லாமியர்கள் சீனாவின் வடமேற்கு எல்லைப்பகுதியில் அதிகளவு வசித்து வருகின்றனர். பொதுவாகவே உய்குர் இஸ்லாமியர்கள் மீதான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அடக்குமுறைகள் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், அண்மை காலமாக, உய்குர் இஸ்லாமியர்களை அடைத்து வைக்க தடுப்பு முகாம்கள் கட்டுவது, அவர்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தகட்டாய கருக்கலைப்பு, கருத்தடைக்குஉட்படுத்துவது, குடும்ப கட்டுப்பாட்டுக்குஒத்துழைக்காத பெண்கள், ஆண்களைத் தண்டனை முகாம்களில் அடைப்பது போன்றவற்றை சீனா செய்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் உய்குர் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஷின்ஜியாங் பகுதிகளில் அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் அடக்குமுறைகளுக்கு நீதிகேட்டு, இரண்டு உய்குர் குழுக்கள், கிழக்கு துருக்கிதான் புலம்பெயர் அரசு, மற்றும் கிழக்கு துருக்கிதான் தேசிய விழிப்புணர்வு இயக்கம் ஆகிய அமைப்புகள் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சீனா மீது வழக்கு தொடர்ந்துள்ளன. படுகொலைகள், பெரிய அளவில் தனிமை முகாம்கள், சித்ரவதை, மக்கள் காணாமல் போவது, கட்டாய கருத்தடை சிகிச்சை, குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து அனாதை இல்லங்களில் அடைத்தல் போன்ற பல்வேறு ஒடுக்குமுறைகளை சீனாசெய்துவருவதாகவும், இதனை விசாரித்து உரிய நீதி வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Islam china
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe