Advertisment

உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக இந்திய பெண் நியமனம்!

உலக நாடுகளின் வளர்ச்சிக்கு கடன் உதவி அளிக்கும் முக்கிய வங்கிகளில் ஒன்றாக உலக வங்கி உள்ளது. இந்த வங்கி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. அதே போல் உலக வங்கியிடம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் கடன் பெற்று நாட்டிற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.இந்நிலையில், இந்த வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் மூத்த நிதி ஆலோசகராக இந்தியாவை சேர்ந்த பெண்ணான் அன்ஷுலா கன்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

USA WORLD BANK NEW DIRECTOR INDIA REGION AND SBI MD ANSHULA KANT APPOINTED

இதற்கான அறிவிப்பை உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இன்று வெளியிட்டார். உலக வங்கியில் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் அமரும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை நிதி ஆலோசகராக பணியாற்றி வரும் அன்ஷுலா கன்ட்-டின் திறமையால் எஸ்.பி.ஐ வங்கி குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

appointed SBI DIRECTOR ANSHULA KANT INDIA REGION NEW DIRECTOR world bank India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe