வீடுகளையோ அல்லது பொருட்களையோ ஐஸோபுரோபைல் ஆல்கஹாலைப் பயன்படுத்திச் சுத்தப்படுத்தினால் 30 வினாடிகள் கூட வைரஸ் உயிர்வாழாது என அமெரிக்க ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

Advertisment

usa research on corona virus lifespan on various tempratures

கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, அதனைக் கட்டுப்படுத்துவது மற்றும் அழிப்பது குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கரோனா வைரஸ் ஆயுட்காலம், தட்பவெப்பத்தைப் பொறுத்து எவ்வாறு மாறுகிறது என்பது குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

Advertisment

 nakkheeran app

இதுகுறித்து அமெரிக்க உள்துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைமை இயக்குநர் பில் பிரையன் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "அதிகமான சூரிய ஒளி, வெப்பம் மற்றும் ஈரப்பதமான சூழல் இருந்தால் கரோனா வைரஸ் பரவல் குறைவதோடு, அது வேகமாக உயிரிழக்கும். இந்தியா போன்ற கோடைக்காலம் நிலவும் நாடுகளுக்கு இது சாதகமாக இருக்கும். அதேபோல ஐஸோபுரோபைல் ஆல்கஹால் கரோனா வைரஸை30 வினாடிகளில் கொல்லும் திறன் படைத்தது. சுற்றுப்புற வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் செல்லும்போது கரோனா வைரஸ் உயிர்வாழும் காலம் பாதியாகக் குறையும். அதேபோல இந்த வெப்பநிலையில், காற்றின் ஈரப்பதமும் அதிகமாக இருந்தால், தரைதளத்தில் 18 மணிநேரம் வாழும் கரோனா வைரஸ் ஒருசில நிமிடங்களில் இறந்துவிடும்.

சராசரியாக 70 முதல் 75 பாரன்ஹீட் வெப்பமும் 20 சதவீதம் ஈரப்பதமும் இருந்தாலே கரோனா வைரஸின் ஆயுள்காலம் பாதியாக குறைந்துவிடும். அதேபோல யு.வி. கதிர்களும் கரோனா வைரஸ் பரவும் சங்கிலியை உடைக்கும் திறன் கொண்டவை. ஒருவரின் எச்சில், நுரையீரல் சளியிலிருந்து எடுக்கப்பட்ட வைரஸை ஐஸோபுரோபைல் ஆல்கஹாலில் சோதிக்கும்போது அது சில வினாடிகள்கூட உயிர்வாழவில்லை. எனவே, ஐஸோபுரோபைல் ஆல்கஹாலைப் பயன்படுத்தி கரோனா வைரஸ் இருந்த இடத்தை சுத்தப்படுத்தும் போது சிலவினாடிகளில் வைரஸ் உயிரிழக்கும்" என தெரிவித்துள்ளார். இதனை மேற்கோள்காட்டிப் பேசிய அதிபர் ட்ரம்ப், அதிக வெப்பம் மற்றும் ஒளியைக் கொண்டு கரோனா பாதித்தவர்களை சிகிச்சைக்கு உட்படுத்தி பார்க்க முயற்சி செய்ய மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.