usa president trump has been discharged

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மருத்துவமனையில் இருந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.

Advertisment

கடந்த அக்டோபர் 2- ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்புக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெளனியா ட்ரம்ப் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

மேலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கரோனா சிகிச்சைக்காக வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அதிபருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 4 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். மருத்துவமனையில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்ற ட்ரம்ப் பின்பு காரில் ஏறி வெள்ளை மாளிகை வந்தடைந்தார்.

Advertisment

இதையடுத்து, ட்ரம்ப் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்நாட்டில் தேர்தல் பிரச்சாரம்சூடுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.