Advertisment

ஈரான் விவகாரம்... டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்...

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதன் பின்னர் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

Advertisment

usa parliament on iran issue

இரு நாட்டு தலைவர்களும் போர் தொடுக்கும் விதமாக பேசி வருகின்றனர். இந்த நிலையில், போர் தொடுக்கும் விவகாரத்தில் டிரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் சபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், மேல்சபையான செனட்டில் டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கே பலம் அதிகம் என்பதால் அங்கு இந்த தீர்மானம் நிறைவேறுவது கடினம் என கூறப்படுகிறது.

America iran trump
இதையும் படியுங்கள்
Subscribe