வேற்றுகிரக விண்கலம் போன்ற தோற்றமுடைய பொருள் ஒன்றை விமானத்தில் துரத்துவது போன்ற வீடியோ ஒன்று கடந்த சில தினங்களாக இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் இந்த வீடியோ உண்மையானது தான் என அமெரிக்க கப்பல் படை தற்போது தெரிவித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த வீடியோ உண்மையானது தான் எனவும், ஆனால் அதில் தென்படும் பொருள் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. விண்கலம் போன்ற ஒரு பொருளை அமெரிக்க கப்பற்படையை சேர்ந்த வீரர்கள் விமானம் மூலம் துரத்தி செல்லும் அந்த வீடியோவில், முதலில் அதனை ஒரு ட்ரோன் என கூறும் அவர்கள், பின்னர் அது காற்றின் எதிர்திசையில் வேகமாக பயணிப்பதாகவும் கூறுகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இது உண்மையான வீடியோ தான் என அமெரிக்க கப்பற்படை தெரிவித்துள்ளது.