Advertisment

இந்தியாவின் ஏ சாட் சோதனை குப்பைகளை உருவாக்கியுள்ளது- அமெரிக்கா...

கடந்த புதன்கிழமை செயற்கைகோள் அழிப்பு ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்ததாக பிரதமர் மோடி அறிவித்தார். இதன் மூலம் ஆபத்து ஏற்படுத்தும் செயற்கைகோளை தாக்கி அழிக்க முடியும். அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்த தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதித்த நாடாக இந்தியா மாறியுள்ளது.

Advertisment

dfdf

இந்நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ள அமெரிக்காவின் நாசா, "இது மிகவும் மோசமான ஒரு விஷயம், மேலும், இந்த குப்பைகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருக்க கூடிய விண்வெளி வீரர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகவும், சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் சுற்றுவட்டப்பாதையில் உள்ள செயற்கைகோள் ஆகியவற்றிற்கு மிக அருகில் இந்த சோதனை நடந்துள்ளது. இது வருங்காலத்தில் மனிதனின் விண்வெளி பயணத்திற்கு ஏற்றது இல்லை. இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது" எனவும் நாசா தெரிவித்துள்ளது.

Advertisment

NASA ISRO
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe