ADVERTISEMENT

அமெரிக்காவில் ஒரே நாளில் 1,320 பேர் கரோனாவுக்கு பலி !

07:56 AM Apr 04, 2020 | santhoshb@nakk…


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும்,பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

உலகளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,140 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் ஒரே நாளில் 1,320 பேர் உயிரிழந்ததால் கரோனா பலி 7,391 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல் இத்தாலியில் ஒரே நாளில் 766 பேர் இறந்ததால் கரோனா உயிரிழப்பு 14,681 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT


ஸ்பெயினில் ஒரே நாளில் 850 பேர் இறந்ததால் கரோனா உயிரிழப்பு 11,198 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பிரிட்டனில் ஒரே நாளில் 684 பேர் இறந்ததால் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3,605 ஆக அதிகரித்துள்ளது.பிரான்சில் 6,507, சீனாவில் 3,322, ஈரானில் 3,294, ஜெர்மனியில் 1,275 பேர் கரோனாவால் இறந்தனர்.

உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,97,810 ஆக அதிகரித்துள்ள நிலையில், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,28,405 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,76,965 ஆக அதிகரித்துள்ளது.உலகளவில் அமெரிக்காவில் ஒரே நாளில் 32,088 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இத்தாலியில் 1,19,827, ஸ்பெயின் 1,19,199, ஜெர்மனி 91,159, சீனாவில் 81,620, பிரான்ஸ் 64,338, ஈரான் 53,183, பிரிட்டன் 38,168, மலேசியா 3,333, பாகிஸ்தான் 2,686 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2,301 லிருந்து 2,547 ஆக உயர்ந்துள்ளது.இதில் இறந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ள நிலையில், 163 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT