Advertisment

காணாமல் போன பெண்ணின் வீடு இரண்டு நாட்களுக்கு பின் கண்டுபிடிப்பு

dsfc

அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் ஒரு பெண் தனது வீட்டை தொலைத்துவிட்டு தேடிய சம்பவம் நடந்துள்ளது. 'டைனி ஹவுஸ்' என அழைக்கப்படும் நகரும் வகையில் சக்கரங்களின் மீது அமைக்கப்பட்ட ஒரு வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார் மேகன் பனு என்கிற பெண். இவர் வெளியே சென்றிருந்த பொழுது இவரது வீட்டினை யாரோ திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் உதவி கேட்டுள்ளார். மேலும் காவல் துறைக்கும் தகவல் அளித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு பின்னர் இவரது சமூக வலைதள பக்கத்தில் இவரது வீட்டை பார்த்ததாக ஒருவர் கூறியுள்ளார். இதனை கொண்டு நடத்தப்பட்ட தீவிர தேடலுக்கு பின் அவரது இருப்பிடத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அவரது வீடு கண்டுபிடிக்கப்பட்டது. தனக்கு உதவியவர்களுக்கும், காவல்துறைக்கும் சமூகவலைதளம் மூலம்அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Advertisment

America
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe