இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்....

trump

இலங்கையில் நாடாளுமன்றம் வருகின்ற 14ஆம் தேதி கூடும் என்று அறிவித்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அதிபர் சிறிசேனா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நவம்19ஆம் துவங்கி நவம் 26 வரை மனுத்தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17ஆம் தேதி இலங்கை புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அலுவலக ட்விட்டர் பக்கத்தில், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என்று வெளியாகிய செய்திகளால் அமெரிக்கா கவலை அடைந்துள்ளது. இதனால் அரசியல் நெருக்கடி ஆழமாகும். இலங்கையின் மிகச்சிறந்த கூட்டாளி நாடு என்ற அடிப்படையில், நாட்டின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு ஜனநாயக அமைப்புகள் மதிக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்கா கருதுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Donad trump srilanka
இதையும் படியுங்கள்
Subscribe