ஒமிக்ரான் கரோனாவின் தீவிரம் - ஆறுதல் அளிக்கும் அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் விளக்கம்!

anthoni fauci

தென்னாப்பிரிக்கா நாட்டில்50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான்கரோனாஉலகமெங்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தஒமிக்ரான் கரோனாவில் உள்ள 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளில், 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில்ஏற்பட்டிருப்பதால், இந்த வகை கரோனாஅதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தநிலையில், அமெரிக்காவின் முன்னணி மருத்துவ நிபுணரும், அமெரிக்க அதிபருக்கான மருத்துவ ஆலோசகருமானஆண்டனி ஃபௌசி, ஆறுதல் அளிக்கும் தகவலைத் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் கரோனா குறித்து பேசியுள்ள அவர், ஆரம்பகட்ட அறிகுறிகள்,ஒமிக்ரான் கரோனாஅதிக பரவல் தன்மையைக் கொண்டது என்பதைக் காட்டுகிறது. அதன் பரவும் தன்மை டெல்டாவைவிட அதிகமாக இருக்கலாம்என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,ஒமிக்ரான் கரோனா, டெல்டா வகை கரோனாவைவிட தீவிரமானதல்லஎன்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது எனவும், ஆனால் அதை முழுவதுமாக உறுதிசெய்ய அதிக காலம் எடுக்கும் எனவும்தெரிவித்துள்ளார்.

delta OMICRON
இதையும் படியுங்கள்
Subscribe