Skip to main content

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளி !!??

Published on 04/07/2018 | Edited on 04/07/2018

 

judge

 

 

 

அமெரிக்காவில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமிக்கப்பட்ட பட வாய்ப்பு. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஆண்டனி கென்னடியின் பதவிகாலம் முடிவடைய இருக்கும் நிலையில் அடுத்த அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமுல் தாபர் நியமிக்கப்பட்ட அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் தகவல்கள் வந்துள்ளன.

 

 

 

வரும் ஜூலை 9-ஆம் தேதிக்குள் அடுத்த அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியை தேர்ந்தெடுக்கும் முனைப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளார். இந்த நிலையில் 2 பெண்கள் உட்பட பலரது பட்டியலை ஆராய்ந்த டிரம்ப் இறுதியாக 4 பேரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் நேர்காணலையும் நடந்தியுள்ளார். அந்த பட்டியிலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமுல் தாபரும் இடம்பெறுள்ளார். அந்த நான்கு பேரிலிருருந்து ஒருவரை நியமிக்க இருப்பதாக கூறப்படுகின்ற நிலையில் அமுல் தாபர்தான்  அடுத்த அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என்றே தகவல்கள் கசிந்து வருகின்றன. 

சார்ந்த செய்திகள்