Advertisment

கொரோனா வைரஸ் பாதித்தவர்களை விமானம் மூலம் மீட்ட அமெரிக்கா!

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்து, தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கரோனா வைரஸ். உலகம் முழுவதும் 24 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் 60,000- க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூழலில், 1765 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்நாட்டு மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

Advertisment

சில நாடுகளில் அந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் எவ்வித உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால் உலக நாடுகளில் உயிரிழப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜப்பான் துறை முகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தகப்பலில் இருந்த அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு விமானம் மூலம் தற்போது மீட்டுள்ளது.

Advertisment
flight
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe