Advertisment

செப்டம்பர் 7 இல் அமெரிக்க அதிபர் இந்தியா வருகை

US President's visit to India on September 8

Advertisment

ஜி20ன் உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் ஜி - 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி - 20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். இந்நிலையில் ஜி - 20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வர உள்ளார். இந்த பயணத்தின் போது 8 ஆம் தேதிபிரதமர் மோடியுடன் அதிபர் ஜோ பைடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

Advertisment

முன்னதாக டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இவருக்கு பதிலாக சீன பிரதமர் லி கியாங்க் பங்கேற்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போன்று உக்ரைனில் மனித உரிமை மீறல் தொடர்பாக புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதன் காரணமாக ஜி 20 அமைப்பின் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Delhi India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe