Advertisment

இந்தியா வருகிறாரா அமெரிக்க அதிபர்? - வெள்ளை மாளிகை தகவல்!

US President coming to India White House Information

Advertisment

ஜி20ன் உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். அந்த வகையில் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வர உள்ளார். இந்த பயணத்தின் போது 8 ஆம் தேதி பிரதமர் மோடியுடன் அதிபர் ஜோ பைடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அதேநேரம் தனக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

Advertisment

US President coming to India White House Information

ஜில் பைடன் கொரோனாதொற்று காரணமாக அதிபர் ஜோ பைடன் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா வருவது சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் முதல் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்தன. இதையடுத்து 2 வது பரிசோதனையிலும் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் தற்போது வெளிவந்துள்ள நிலையில் டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் அதிபர் ஜோ பைடன் பங்கேற்பார் என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

India Delhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe