Advertisment

முன்னாள் அதிபர் டிரம்ப் வழக்கு; நடிகைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

us former president donald trump case related court order

Advertisment

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் உடன் இருந்த உறவை மறைக்க 2016 தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து, அவருக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மான்ஹட்டன் கிராண்ட் ஜூரி, ட்ரம்ப் மீதான இந்த கிரிமினல் குற்றச்சாட்டை முன் வைத்தது.

இவ்வழக்கில் ட்ரம்பிற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் திடீரென அவருக்கு எதிராக சாட்சியளித்தார். தொடர்ந்து ட்ரம்ப் பணம் வழங்கியதற்கான ஆதாரத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இதனால் பரபரப்பு உண்டானது. இந்நிலையில் நடிகையுடன் இருந்த தொடர்பை மறைப்பதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் லோயர் மான்ஹட்டன் நீதிமன்றத்தில் சரணடைந்த டொனால்ட் டிரம்ப், நீதிமன்றத்திற்கு வெளியே நின்ற ஆதரவாளர்களிடம் கையசைத்து விட்டு ரகசிய வழியில் நீதிமன்றத்திற்குள் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டார். பிறகு விசாரணை நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில்நடைபெற்று வருகிறது. அப்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஒன்றில், டொனால்ட் ட்ரம்ப்பின்வழக்கு செலவுக்காகஸ்டார்மிடேனியல்ஸ், இந்திய மதிப்பில் சுமார் 9 கோடியே 86 லட்சம் ரூபாயைவழங்க உத்தரவிட்டுள்ளது.

acterss America
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe