Skip to main content

முன்னாள் அதிபர் டிரம்ப் வழக்கு; நடிகைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

us former president donald trump case related court order

 

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் உடன் இருந்த உறவை மறைக்க 2016 தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து, அவருக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மான்ஹட்டன் கிராண்ட் ஜூரி, ட்ரம்ப் மீதான இந்த கிரிமினல் குற்றச்சாட்டை முன் வைத்தது.

 

இவ்வழக்கில் ட்ரம்பிற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் திடீரென அவருக்கு எதிராக சாட்சியளித்தார். தொடர்ந்து ட்ரம்ப் பணம் வழங்கியதற்கான ஆதாரத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இதனால் பரபரப்பு உண்டானது. இந்நிலையில் நடிகையுடன் இருந்த தொடர்பை மறைப்பதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் லோயர் மான்ஹட்டன் நீதிமன்றத்தில் சரணடைந்த டொனால்ட் டிரம்ப், நீதிமன்றத்திற்கு வெளியே நின்ற ஆதரவாளர்களிடம் கையசைத்து விட்டு ரகசிய வழியில் நீதிமன்றத்திற்குள் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டார். பிறகு விசாரணை நடைபெற்றது.

 

அதனைத் தொடர்ந்து இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஒன்றில், டொனால்ட் ட்ரம்ப்பின் வழக்கு செலவுக்காக ஸ்டார்மி டேனியல்ஸ், இந்திய மதிப்பில் சுமார் 9 கோடியே 86 லட்சம் ரூபாயை வழங்க உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமெரிக்க இளைஞர் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

Chennai police registered a case against the American youth

 

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

சென்னையில் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் அலெக்ஸ் (வயது 22) என்பவர் மதுபோதையில் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள், காவலர்கள், வாகன ஓட்டிகளை எனப் பலரையும் கண்மூடித்தனமாக தாக்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

 

இந்நிலையில் காவலர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகளைத் தாக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த அலெக்ஸை கைது செய்து அவர் மீது 6 பிரிவுகளில் சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர் முதல் முறையாக மது அருந்தியதால் ஏற்பட்ட போதையால் சாலையில் ரகளையில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் டிப்ளமோ படித்துள்ள இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சோலர் நிறுவனத்திற்கு பயிற்சிக்காக வந்துள்ளார். இவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் இவரைச் சொந்த நாட்டுக்கு அனுப்ப போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. 

 

 

Next Story

சோதனை சாவடியில் கார் வெடித்து விபத்து; 2 பேர் உயிரிழப்பு

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Car on bridge accident; 2 people lost their lives in america

 

பாலத்தில் வந்த கார் திடீரென்று வெடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அமெரிக்கா நாட்டிற்கும், கனடா நாட்டிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சி அருகே ரெயின்போ பாலம் உள்ளது. இதன் அருகே அமெரிக்கா - கனடா எல்லை சோதனை சாவடி இருக்கிறது. இங்கு வரும் வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்த போது அங்கு வந்த கார் ஒன்று வெடித்து சிதறியுள்ளது. உடனே, இதனை பார்த்த அதிகாரிகள், அங்கு சென்று பார்த்த போது, அந்த காரில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருந்தனர். 

 

பாலத்தின் எல்லையில் வந்த வாகனம் ஒன்று வெடித்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் புலன் விசாரணை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோகுல் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நயாகரா நீர்வீழ்ச்சியில் உள்ள ரெயின்போ பாலத்தில் நடந்த இந்த கார் வெடிப்பு சம்பவத்தை நியூயார்க்கில் உள்ள அதிகாரிகள் மிக நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.