forest fire

Advertisment

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த ஒரு மாத காலமாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் அங்கு பலத்த இயற்கை சேதம் ஏற்பட்டுள்ளது. இத்தீயை அணைக்கும் பணியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர். இதுவரை மொத்தமாக 30 லட்சம் ஏக்கர் வனப்பகுதிகள் முற்றிலும் தீக்கிரையாகியுள்ளன.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காட்டுத்தீ பரவல், தற்போது மாகாணத்தின் மத்திய பகுதியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளன. இதனால் வெப்பநிலை உயர்வு, மின்சாரத் துண்டிப்பு மற்றும் காற்று மாசு காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். கலிபோர்னியாவில் பற்றிய நெருப்பு தற்போது வாஷிங்டன் மற்றும் ஒரேகான் மாகாண வனப்பகுதிலும் பரவத்தொடங்கியுள்ளது.

Advertisment

ஒரேகான் மாகாணத்தில் மட்டும் இதுவரை 5 சிறிய நகரங்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. மேலும் 10 லட்சம் ஏக்கர் வனப்பகுதிகள் நாசமாகியுள்ளன. இதுவரை மொத்த பலி எண்ணிக்கையானது ஒரு வயது குழந்தை உட்பட 35 ஆகப் பதிவாகியுள்ளது.

அரசின் துரித நடவடிக்கை காரணமாக உயிர் சேதம் பெரிய அளவில் இல்லையென்றாலும், 40 ஆயிரம் மக்கள் வீடு வசதியை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.