/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/New Project (33)_1.jpg)
ஆப்கானிஸ்தானில் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வரும் நிலையில், அந்தநாட்டில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. தாலிபன்கள் அந்தநாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகின்றனர். நாட்டின் பெரும்பகுதியை கைப்பற்றி விட்டதாக தாலிபன்கள் கூறி வருகின்றனர்.
இதனால் மீண்டும் ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி ஏற்படுமோ என அச்சம் எழுந்தது. இந்தநிலையில் அமெரிக்க படைகள் கடந்த சில நாட்களாக தாலிபன்கள் மீது வான்வெளி தாக்குதலை நடத்த துவங்கியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர், "கடந்த சில நாட்களாக ஆப்கான் தேசிய பாதுகாப்பு படைக்கு ஆதரவாக வான்வெளி தாக்குதல் நடத்தினோம்" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "தொடர்ந்து நாங்கள் ஆப்கான் தேசிய பாதுகாப்பு படைக்கு ஆதரவாக வான்வெளி தாக்குதல் நடத்துவோம்" எனவும் கூறியுள்ளார்.
Follow Us