Advertisment

டெல்டா வகை கரோனாவை கவலைக்குரியதாக அறிவித்தது அமெரிக்கா!

us cdc

Advertisment

உலகில்தற்போது பரவிவரும் கரோனாவைரஸ் வகைகளில், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கரோனாஅதிக ஆபத்தானதாக கருதப்படுகிறது. இது மற்ற கரோனா வகைகளைக் காட்டிலும், 50 சதவீதம் அதிக பரவல் தன்மையைக் கொண்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் கடந்த மாதம் டெல்டா வகை கரோனாவைக் கவலைக்குரிய கரோனா வகையாக அறிவித்தது.

இந்தநிலையில், அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், டெல்டா வகை கரோனாவைக் கவலைக்குரிய கரோனாவகையாக அறிவித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்க அதிபரின்தலைமை மருத்துவ ஆலோசகர், டெல்டா வகை கரோனாவால்தொற்றுகள் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரித்திருந்தார்.

டெல்டா வகை கரோனாவைக் கவலைக்குரியதாக வகைப்படுத்தியுள்ள அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், அதற்கான காரணத்தையும் கூறியுள்ளது. இதுதொடர்பாக அந்த மையம், டெல்டா வகை கரோனாவின் பரவல் தன்மை அதிகரித்துள்ளது என்றும், டெல்டா வகை கரோனாவிற்கெதிராக, கரோனாசிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் செயல்திறன் குறைவாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. மேலும்ஆய்வக சோதனையில், தடுப்பூசிகளின் செயல்திறனும் டெல்டா வகை கரோனாவிற்குஎதிராக குறைவாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அந்த மையம்கூறியுள்ளது.

America coronavirus strain Delta Variant
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe