கரோனா தடுப்புப் பணிகளுக்காக இந்தியாவுக்கு நிதியுதவி வழங்கும் அமெரிக்கா!

us announces corona virus funds to india

சீனாவின் வுஹான் நகரில் பரவிய கரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி, உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு இதுவரை முறையான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், இந்த வைரஸை எதிர்கொள்வது சற்று சவாலாக உள்ளது. சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது மட்டும்தான், இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான ஒரே வழி என்பதால் உலக நாடுகள் ஊரடங்கை பிறப்பித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைதாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக இந்தியாவுக்கு ரூ.27 கோடி நிதியுதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட பணிகளுக்காக நிதி வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

America corona virus covid 19 India
இதையும் படியுங்கள்
Subscribe