germany

Advertisment

உலகில் கரோனாபெருந்தொற்றை நன்றாக கையாண்ட சில நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில், தற்போது கரோனாநான்காவது அலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் ஜெர்மனியின் உள்ள கரோனாநோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரேநாளில்அந்தநாட்டில்50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாபாதிப்பு உறுதியாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் கரோனாபரவ தொடங்கியதிலிருந்து அந்தநாட்டில் ஒரேநாளில் பதிவான அதிகபட்ச கரோனாபாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

இந்தநிலையில்அமெரிக்க ஊடகம், ஜெர்மனியில் கடந்தசில வாரத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில்எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகவும், இதில் பாதிப்பேர் வென்டிலேட்டர்களில்இருப்பதாகவும்தெரிவித்துள்ளது. இவ்வாறு வென்டிலேட்டர்களில் இருப்பவர்களில் யாருமே கரோனாதடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை எனவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.