taiwan incident

Advertisment

தைவான் நாட்டின்தைபே பகுதியிலிருந்துதைதுங்கிற்குசென்ற விரைவு ரயில், சுரங்கப் பாதைக்குள்தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நடந்தபோது, கிட்டத்தட்ட 350 பேர் அந்த இரயிலில்பயணித்ததாகதகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 36 பேர் பலியாகிவுள்ளதாகஅந்த நாடு தெரிவித்துள்ளது. மேலும் 98 பேர் வரை இந்த விபத்தில் காயமடைந்திருப்பதாகவும் அந்நாடு கூறியுள்ளது.

இந்த விபத்தின்போது, இரயில்பெட்டிகள், சுரங்கப் பாதையின் சுவரில் மோதியதாகவும், 70க்கும் மேற்பட்டவர்கள் சுரங்கத்திற்குள் இன்னும் சிக்கியுள்ளதாகவும், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில பத்தாண்டுகளில், தைவானில் நடைபெற்ற மோசமான ரயில்விபத்தாக இது கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.