Advertisment

ஐ.நா சபைக்கே இப்படி ஒரு நிலையா..! உலகநாடுகளை அதிரவைத்த அறிவிப்பு...

உறுப்பு நாடுகள் ஐ.நா சபைக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாததால், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது ஐ.நா சபை.

Advertisment

uno to remain closed on weekends due to money deficit

உலக அமைதி மற்றும் சமத்துவத்தை நிலைநிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட ஐ.நா சபை, உலகநாடுகளுக்கு மத்தியில் ஏற்படும் குழப்பங்களை தீர்த்து அதன் முன்னேற்றங்களுக்கான திட்டங்களில் உதவி புரிய உருவாக்கப்பட்ட ஒருஅமைப்பு ஆகும். இதில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

ஆண்டு தோறும் ஐ.நா சபைக்கு அதன் உறுப்பு நாடுகள் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். இந்த தொகையை கொண்டே ஐ.நா சபை இயங்கும். இந்த நிலையில் இந்தியா உட்பட 35 நாடுகள் மட்டுமே இந்த ஆண்டிற்கு செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகள் தங்கள் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாத காரணத்தால் ஐ.நா சபை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

Advertisment

ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கூறும் ஐ.நா சபை, நிதி நெருக்கடி காரணமாக தற்போது வார இறுதி நாட்களில் அலுவலகம் செயல்படாது என அறிவித்துள்ளது. ஐ.நா சபையின் இந்த நிதி நெருக்கடி குறித்த அறிவிப்பு உலக நாடுகள் பலவற்றின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

uno
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe