Skip to main content

ஐ.நா சபைக்கே இப்படி ஒரு நிலையா..! உலகநாடுகளை அதிரவைத்த அறிவிப்பு...

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

உறுப்பு நாடுகள் ஐ.நா சபைக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாததால், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது ஐ.நா சபை.

 

uno to remain closed on weekends due to money deficit

 

 

உலக அமைதி மற்றும் சமத்துவத்தை நிலைநிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட ஐ.நா சபை, உலகநாடுகளுக்கு மத்தியில் ஏற்படும் குழப்பங்களை தீர்த்து அதன் முன்னேற்றங்களுக்கான திட்டங்களில் உதவி புரிய உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இதில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

ஆண்டு தோறும் ஐ.நா சபைக்கு அதன் உறுப்பு நாடுகள் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். இந்த தொகையை கொண்டே ஐ.நா சபை இயங்கும். இந்த நிலையில் இந்தியா உட்பட 35 நாடுகள் மட்டுமே இந்த ஆண்டிற்கு செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகள் தங்கள் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாத காரணத்தால் ஐ.நா சபை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கூறும் ஐ.நா சபை, நிதி நெருக்கடி காரணமாக தற்போது  வார இறுதி நாட்களில் அலுவலகம் செயல்படாது என அறிவித்துள்ளது. ஐ.நா சபையின் இந்த நிதி நெருக்கடி குறித்த அறிவிப்பு உலக நாடுகள் பலவற்றின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டோவை பயன்படுத்திய ரஷ்யா - பொதுச்சபைக்கு நகரும் நாடுகள்!

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

unsc

 

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த நேற்று முன்தினம் காலை ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்ட நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தீவிரமான தாக்குதலை நடத்தி வருகின்றது. போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும், ஏவுகணைகள் மூலமும் தொடர் தாக்குதல் நடந்து வருவதால், உக்ரைன் மக்கள் மெட்ரோ நிலையங்களில் இருக்கும் வெடிகுண்டு பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

 

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்யப்பட்டது தோல்வியடைந்துள்ளது. வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு எதிரான தீர்மானத்தை ரஷ்யா தோற்கடித்தது. அமெரிக்கா, அல்போனியா கொண்டுவந்த தீர்மானத்திற்கு 11 நாடுகள் ஆதரவளித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய 3 நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

 

இதனையடுத்து ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள், ஒரு கூட்டறிகையை வெளியிட்டுள்ளன. அதில், இந்த விவகாரத்தை ரஷ்யாவின் வீட்டோ அதிகாரம் செயல்படாத ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக்கு எடுத்து செல்லப்போவதாக தெரிவித்துள்ளன. மேலும் உலக நாடுகள், உக்ரைன் மீதான தாக்குதலுக்கு தொடர்ந்து ரஷ்யாவை பொறுப்பாளியாக்கும் எனவும் அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே உக்ரைனில் இருக்கும் இந்திய தூதரகம், இந்தியர்களுக்கு புதிய அறிவுறுத்தல்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் உக்ரைன் எல்லை சாவடிகளில் இருக்கும் இந்திய அதிகாரிகளுக்கு தெரிவிக்காமால், யாரும் எல்லை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என  இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் மேற்கு உக்ரைன் நகரங்களில் உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகளுடன் இருப்பது, எல்லை பகுதிகளுக்கு வருவதைவிட பாதுகாப்பானது என தெரிவித்துள்ள இந்திய தூதரகம், கிழக்கு உக்ரைனில் இருப்பவர்கள் அடுத்த கட்ட அறிவுறுத்தல் வரும்வரை தற்போது இருக்குமிடத்திலேயே இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

Next Story

ஐநா சபையில் உரையாற்றும் பிரதமர் மோடி!

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

narendra modi

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது தற்போது உறுதியாகியுள்ளது. அமெரிக்காவிற்குச் செல்லும் பிரதமர் மோடி, இம்மாதம் 24ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் நடத்த இருக்கும் குவாட் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.

 

இந்த குவாட் தலைவர்கள் மாநாட்டில் ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய பிற குவாட் நாட்டு பிரதமர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த குவாட் தலைவர்கள் மாநாட்டில் தங்கள் நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்துவது, கரோனாவுக்கு எதிராக போராடுவது, வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மற்றும் சைபர்ஸ்பேஸ் ஆகியவற்றில் கூட்டாக செயல்படுவது, சுதந்திரமான இந்தோ - பசிபிக் பிராந்தியம் ஆகியவை தொடர்பாக நான்கு நாட்டுத் தலைவர்களும் விவாதிக்கவுள்ளனர்.

 

அதன்பின்னர் பிரதமர் மோடி, இம்மாதம் 25ஆம் தேதியன்று நடைபெறவுள்ள ஐநா பொதுச் சபையின் 76வது அமர்வின் உயர்மட்ட பிரிவு பொது விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.