எகிப்தில் நீண்டகாலமாக இருந்த சர்வாதிகார ஆட்சியை நீக்கி கடந்த 2012-ம் ஆண்டில் முதல் முறையாக ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த முகமது மோர்சி அதிபரானார்.

Advertisment

uno insist independent probe should be conducted on morsis case

இவர் அதிபராக பதவியேற்ற ஒரு ஆண்டிலேயே எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் இவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்த தொடங்கினர். போராட்டத்தில் ஈடுபட்டோரை கொல்வதற்கு இவர் உத்தரவிட்டதாக கூறி, அப்போதைய ராணுவ அமைச்சர் அப்தல் பத்தா அல் சிசி தலைமையிலான ராணுவம், மோர்சியை பதவியை விட்டு விலக்கி, அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

அந்த வழக்கில், முகமது மோர்சிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் அது 20 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் பாலஸ்தீன அமைப்புடன் இவருக்கு தொடர்பிருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் நேற்று இவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிமன்ற வளாகத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Advertisment

இந்நிலையில் முகமது மோர்சியின் மரணம் இயற்கையான மரணம் அல்ல, முழுமையான திட்டமிட்ட கொலை என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஐநா மனித உரிமைகள் கவுன்சில், “காவலில் இருந்த முகம்மது மோர்சி மரணம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.