ADVERTISEMENT

ஆங்கிலத்தில் மட்டும் தான் பேச வேண்டும்; கண்டிஷன் போட்ட பேராசிரியரை வீட்டுக்கு அனுப்பிய நிர்வாகம்...

11:47 AM Jan 29, 2019 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ளது ட்யூக் பல்கலைக்கழகத்தில் சீனாவை சேர்ந்த மாணவர்கள் உயிரிபுள்ளியியல் துறையில் படித்து வருகின்றனர். அந்த மாணவர்கள் கல்லூரியின் பொது இடங்களில் சீன மொழியில் பேசுவதாக இரு ஆசிரியர்கள் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து அங்கு பேராசிரியராக பணியாற்றிய மேகன் நீலி என்பவர் சீன மொழியில் பேச கூடாது என்றும், ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்றும் அந்த மாணவர்களுக்கு மெயில் அனுப்பியுள்ளார். மேலும் ஆங்கிலத்தில் பேசவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறியுள்ளார். அவரின் இந்த மெயில் சமூகவலைதளங்களில் பரவ, அவர் வகித்து வந்த இளங்கலைக் கல்வித்திட்ட இயக்குநர் பதவியில் இருந்து அவரை நீக்கி பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி விளக்கமளித்துள்ள மேகன், 'வேலைவாய்ப்புக்காக நீங்கள் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். அப்படி பேசவில்லை என்றால் தான் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறினேன்' என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT