Advertisment

"எந்தவொரு ஆபத்தையும் விட நன்மை அதிகம்" - பைசர் தடுப்பூசி குறித்து முக்கிய முடிவெடுத்த இங்கிலாந்து!

pfizer vaccine

உலகெமெங்கும் அச்சுறுத்திவரும் கரோனவைக் கட்டுப்படுத்த, இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளைக் கண்டுபிடித்துப் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தன. முதலில் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கேதடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு சில நாடுகள் 16 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கேதடுப்பூசி செலுத்த தொடங்கினர்.

Advertisment

இதன்தொடர்ச்சியாககனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் பைசர் தடுப்பூசியை 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த அனுமதி வழங்கின. இந்தநிலையில்தற்போது இங்கிலாந்தும்12 வயது மற்றும் அதற்கும்மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கியுள்ளது.

Advertisment

இதுகுறித்து இங்கிலாந்து மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை அமைப்பின் தலைமை நிர்வாகி, "பைசர் தடுப்பூசி இந்த வயதினரிடையே (12-15) பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்றும், இந்த தடுப்பூசியின் நன்மைகள் எந்தவொரு ஆபத்தையும் விட அதிகம் என்றும்நாங்கள் முடிவுக்கு வந்துள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

coronavirus vaccine united kingdom pfizer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe