உலகம் முழுவதும் பல்வேறு காரணங்களுக்காக தினமும் ஆயிரக்கணக்கான விவாகரத்துகள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண் ஒருவர் தனது விவாகரத்துக்கு கூறிய வினோத காரணம்பலரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.

Advertisment

United Arab Emirates woman seeks divorce over husband’s extreme love

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்து வேண்டும் என கூறி ஷரியா நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். திருமணமாகி ஒரு ஆண்டு ஆன நிலையில், தன் கணவர் தன்னை அளவுக்கதிகமாக நேசிப்பதால், தன்னுடன் சண்டையே போடுவதில்லை எனவும், தன்னை எதிர்த்து பேசுவதோ, கண்டிப்பதோ இல்லை எனவும் அந்த பெண் தனது விவகாரத்துக்கான காரணத்தை கூறியுள்ளார்.

மேலும் அந்த பெண் கூறுகையில், "என் கணவர் வீடு சுத்தம் செய்வது போன்ற அனைத்து வேலைகளிலும் எனக்கு உதவியாக இருக்கிறார். எப்போது பார்த்தாலும் பரிசு பொருட்களை வாங்கிவந்து வீட்டில் குவிக்கிறார். ஆனால் அவரது இந்த பாசம் எனக்குநரகமாக இருக்கிறது. என்னுடன் அவர் சண்டையிடுவதே இல்லை. என்னை கண்டிப்பது கூட கிடையாது. என் மீது அதீத அன்பு செலுத்துகிறார்.

Advertisment

கடந்த ஒரு வருடமாக எப்போதாவது சண்டை வரும் என நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் என் வாழ்வில் அப்படி ஒரு சம்பவமே நடக்காது என எனக்கு தோன்றுகிறது. எனவே எனக்கு விவாகரத்து வழங்குங்கள்" என முறையிட்டுள்ளார். வினோதமான இந்த வழக்கை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள அந்த பெண்ணின் கணவன், "திருமணமான ஒரே ஆண்டில் எதையும் முடிவு செய்ய முடியாது. அனைவரும் தங்கள் தவறுகளில் இருந்து தானாக படம் கற்றுக்கொண்டு மாறுவார்கள்" என தெரிவித்துள்ளார்.