United Arab Emirates President Sheikh Khalifa Bin Zayed Al Nahyan has passed away

Advertisment

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (வயது 73) உடல் நலக்குறைவால் காலமானார். அதிபரின் மறைவையடுத்து, அந்நாட்டில் 40 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சகங்கள், அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் மூன்று நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

74 வயதில் மறைந்த ஷேக் கலீஃபா பின் சையத் கடந்த 2004- ஆம் ஆண்டில் இருந்து யூஏஇ அதிபராக இருக்கிறார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபரான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்காக ஐக்கிய அரபு அமீரகம், அரபு மற்றும் இஸ்லாமிய தேசம் மற்றும் உலக மக்களுக்கு ஜனாதிபதி விவகார அமைச்சகம் இரங்கல் தெரிவிக்கிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் நவம்பர் 3, 2004 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் பணியாற்றினார்.

18 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராகப் பதவி வகித்து வந்துள்ளார். இவரே ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இரண்டாவது அதிபர். இவர் உலகின் இரண்டாவது பணக்கார அரசரும் ஆவார். இவருடைய சொத்து மதிப்பு, 23 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணக்கிடப்படுகிறது.