Advertisment

பாகிஸ்தான் பொதுத் தேர்தல்; யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

An unexpected twist on Pakistan General Election

பாகிஸ்தானில் நேற்று (08-02-24) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையே நாடு தவித்து வரும் நிலையில், அந்நாடு பொதுத் தேர்தலை சந்திக்கிறது. இந்தத் தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீக் லீக்-என், இம்ரான் கான் தலைமையிலான தெக்ரீக் - இ - இன்சாப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவதாகத்தகவல் வெளியாகியிருந்தது.

Advertisment

இதனிடையே, பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும்முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானுக்கு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மேலும், அவரது மனைவி புஷ்ரா பிபிக்கும்இந்த வழக்குகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தேர்தலில் போட்டியிடத்தடை விதித்திருந்தது. இதனால், அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர்.

Advertisment

இதனையடுத்து, இங்கு பொதுத் தேர்தல் நேற்று (08-02-24) நடைபெற்றது. மொத்தமுள்ள 265 நாடாளுமன்றத்தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 133 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம். அதன்படி, காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலையொட்டி நாடு முழுவதும் 9 லட்சத்து 7 ஆயிரத்து 675 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. மேலும், பாதுகாப்பிற்காக போலீசார், சிறப்பு ஆயுதப்படை வீரர்கள், ராணுவ வீரர்கள் எனப் பல்வேறு வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத்தேர்தலில் தெக்ரீக் - இ - இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 84 இடங்களைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கின்றனர். அதேபோன்று, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 59 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 44 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, பிலாவல் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனிடையே, எந்த கட்சியுடனும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கமாட்டோம் என இம்ரான் கான் கட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Election Pakistan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe