ரத

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தொடர்ந்து, ஏழாவது நாளாக தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் கீவ்-வை நோக்கி முன்னேறி வருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்திவரும் இந்திய அரசு, ஆப்ரேஷன் கங்கா மூலம் அவர்களைத் தாயகம் அழைத்து வருவதற்கான முன்னெடுப்புகளையும் எடுத்துவருகிறது.

Advertisment

இந்த நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான இந்தப் போரில் இந்திய மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் கார்கிவ் நகரில் நடந்த குண்டுவீச்சில் பலியாகியுள்ளார். அவர் கார்கிவ் நகரிலிருந்து வெளியேற ரயில் நிலையம் சென்றபோது குண்டுவீச்சில் சிக்கி அவர் பலியானதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், ரஷ்யத் தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலை ஐநாவிற்கான உக்ரைன் தூதர் செர்கி கிஸ்லிட்சியா தெரிவித்துள்ளார். அதில், " இந்தியாவிற்கும், பாதிக்கப்பட்ட உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் கூறியுள்ளார்.