Advertisment

உக்ரைன் விமான விபத்து - ஈரான் மீது அமெரிக்கா சந்தேகம்!

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர். டிரம்ப்பின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்தது.

Advertisment

இந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் விமானம் ஒன்று சில தினங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானது. இந்நிலையில், இது தொடர்பாக தற்போது அமெரிக்கா சந்தேகம் எழுப்பியுள்ளது. ஈரானின் ஏவுகணை தாக்குதலால் விமானம் நொறுங்கி இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகம் அடைந்துள்ளோம் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

Flight crush
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe