ரஷ்யாவுக்கு எதிரான போரில் தன்னை இணைத்துக் கொண்ட உக்ரைன் நடிகர் பாஷா லீ தாக்குதலின் போது உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
33 வயதான பாஷா லீ, கடந்த பிப்ரவரி 24- ஆம் தேதி அன்று உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததையடுத்து, நாட்டுக்காக போராட வேண்டும் எனக் கூறி உக்ரைன் ராணுவத்தில் இணைந்தார். இர்பின் நகரில் ரஷ்யப் படைகளை எதிர்த்து நின்ற அவர், ரஷ்யாவின் குண்டுவெடிப்பில் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவர், இப்படி ரஷ்யா உக்ரைனைத் தாக்குகிறது. இதை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் புன்னகைக்கிறோம் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.