
ஒரு வாரமாக ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது. தொடர் போர் சூழல் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வரும் நிலையில் உக்ரேனின் லிவீவ் நகர் அருகே துப்பாக்கிச் சூட்டில் என்ற இந்திய மாணவர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கர்நாடகாவைச் சேர்ந்த நவீன என்ற மாணவர் அங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த நிலையில், தற்போது இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. லிவீவ் நகரில் நடைபெற்ற சண்டையில் படுகாயமடைந்த ஹார்ஜோத் சிங் என்ற மாணவர் கீவ் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைபெறும் ஹார்ஜோத் சிங் தன்னை இந்திய அழைத்துச் செல்ல உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். லிவீவ் காரில் சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும், அப்பொழுது இந்திய மாணவர் ஹார்ஜோத் சிங்கிற்கு காயம் ஏற்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us