Advertisment

உக்ரைன் நாட்டு விமானத்தை சுட்டது ஈரான்தான்! உலக நாடுகள் அதிர்ச்சி!

கடந்த புதன்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகி 176 பேர் பலியானார்கள். இராக்கில் இருக்கும் அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி 80 பேர் பலியான சில மணி நேரத்தில் இந்த விபத்து நடந்தது.

Advertisment

இது விபத்து என்று ஈரான் சொல்லிவந்த நிலையில், அமெரிக்காவும் உக்ரைனும் ஈரான்தான் சுட்டு வீழ்த்தியிருக்க வேண்டும் என்று குற்றம்சாட்டின. ஈரான் தெரியாமல்தான் சுட்டு வீழ்த்தியிருக்க வேண்டும் என்றுதான் அவை கூறின. அதையும்ஈரான்மறுத்தது.

Advertisment

IRAN

ஆனால், சனிக்கிழமை காலை, உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியது உண்மைதான் என்று ஈரான் ஒப்புக்கொண்டிருக்கிறது.

ஈராக்கில் அமெரிக்க ராணுவ முகாம்களை தாக்கிய சிறிது நேரத்தில் ஈரானிய புரட்சிகரப்படை முகாமை நோக்கி இந்த விமானம் வந்ததால் சந்தேகப்பட்டு, சுட்டுவீழ்த்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான் அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிராக உலக நாடுகளில் கருத்து உருவாகும் நிலையில் ஈரான் ராணுவத்தின் முட்டாள்தனமான இந்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

usa iran Flight Incident Ukraine
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe