Skip to main content

கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்களுக்கு நற்செய்தி சொன்ன பிரிட்டன்!

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

 

COVAXIN

 

கரோனா தொற்று பரவல் தற்போது உலகத்தையே ஆட்டிப்படைத்துவருகிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகள், வேறு நாடுகளிலிருந்து தங்கள் நாட்டுக்கு வருபவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இங்கிலாந்து அரசும் அவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது.

 

இந்தநிலையில் அண்மையில் பிரிட்டன் அரசு, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும், ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் தங்கள் நாட்டிற்கு வரும்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாகவே கருதப்பட்டு 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவித்தது.

 

இதனையடுத்து  பிரிட்டனுக்குப் பதிலடி தரும் வகையில், அந்த நாட்டிலிருந்து வரும் பிரிட்டன் குடிமக்கள் 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என இந்தியா அறிவித்தது. இதனைத்தொடர்ந்து தான் முன்பு அறிவித்த விதிமுறைகளில் இருந்து பின்வாங்கிய பிரிட்டன் கோவிஷீல்ட் அல்லது பிரிட்டனால் அங்கீகரிக்கப்பட்ட மற்ற தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட இந்தியர்கள் பிரிட்டனில் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என அறிவித்தது.

 

ஆனால் கோவாக்சின் தடுப்பூசியை பிரிட்டன் அங்கீகரித்ததால், அத்தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள் பிரிட்டனுக்கு சென்றால் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலை நீடித்து வந்தது.

 

இந்தநிலையில் கோவாக்சின் தடுப்பூசியை தங்களது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் வரும் 22 ஆம் தேதி முதல் சேர்க்கப்போவதாகப் பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. இதனால் 22 ஆம் தேதி முதல் கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் பிரிட்டனுக்கு சென்றால் தனிமைப் படுத்திக்கொள்ளத் தேவையில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
King Charles of England has cancer

இங்கிலாந்து மன்னர் 3 ஆம் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து மன்னர் 3 ஆம் சார்லஸுக்கு (வயது 73) புற்றுநோய் இருப்பது இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், நேற்று முதல் அவருக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை தொடங்கப்பட்டு இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது. புரோஸ்டேட் (prostate) என்ற சிகிச்சைக்கு சென்றபோது புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் புரோஸ்டேட் வகை புற்றுநோய் பாதிப்பு இல்லை எனவும் மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Next Story

நடுக்கடலில் சிக்கிய கப்பல்; ஹாலிவுட்டையே மிஞ்சும் ரியல் ஹைஜாக்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

A ship stuck in the middle of the sea; a real hijack that surpasses Hollywood


நடுக்கடலில் கப்பல் ஒற்றை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கி முனையில் ஹைஜாக் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரிட்டனை சேர்ந்த தனியார் நபரின் 'கேலக்ஸி லீடர்' என்ற கப்பல் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஜப்பானிய நிறுவனம் இயக்கிவந்த இந்த கப்பலை ஹெலிகாப்டர் மூலம் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல், திடீரென கப்பலில் இறங்கி கப்பல் கேப்டனை துப்பாக்கி முனையில் மிரட்டி, கப்பலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கப்பலை ஹைஜாக் செய்தது யார் என்று தெரியாத நிலையில், ஹவுதி நாட்டின் டிவி சேனல்களில் கப்பலை ஹைஜாக் செய்த ஹவுதி கிளர்ச்சியாளர்களின் வீடியோ வெளியாகியுள்ளது. ஹாலிவுட் தரத்தையும் தாண்டும் அளவிற்கான இந்த ரியல் ஹைஜாக் காட்சிகள் உலக அளவில் பேசுபொருளாகி வருகிறது.

 

இந்நிலையில் கப்பலில் சிக்கியுள்ள 25 குழுவினர்களும் இஸ்லாமிய சட்டப்படி நடத்தப்படுவர் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.