uk mp

Advertisment

பிரிட்டன் எம்.பி டேவிட் அமெஸ், தனது தொகுதியில் உள்ள தேவாலயத்தில் வாக்காளர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, ஒருவர் அவரை கத்தியால் சரமாரியாகத் தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே டேவிட் அமெஸ் உயிரிழந்தார்.

டேவிட் அமெஸைகொன்ற25 வயதான சோமாலிய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நாட்டவரைக் கைது செய்துள்ளனர். எம்.பி-யை கொன்ற பிறகு அங்கேயே அமைதியாக அமர்ந்திருந்து அந்த நபர் காவல்துறையிடம் சரணடைந்துள்ளார். பிரிட்டன் எம்.பி கொல்லப்பட்டதை தீவிரவாத செயலாகஅறிவித்துபிரிட்டிஷ் காவல்துறை விசாரித்து வருகிறது.

கொலை செய்தநபர் எம்.பிடேவிட் அமெஸைகத்தியால் குத்தியதாக'தி சன்' ஊடகத்தின் இரண்டு பெண் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், எம்.பி கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்."டேவிட் அமெஸ் மரணத்தால்இன்று எங்கள் இதயங்கள் அனைத்தும் அதிர்ச்சியாலும், சோகத்தாலும் நிரம்பியுள்ளன" எனத் தெரிவித்துள்ளார். டேவிட் அமெஸ் போரிஸ் ஜான்சனின்கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இதற்கிடையே எம்.பி கொலையை தொடர்ந்து மற்ற எம்.பிக்களும்தங்களுக்குகூடுதல் பாதுகாப்பு வழங்கவேண்டும் என வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.