சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத்தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இருந்த போதிலும் இதுவரை இந்தியாவிலும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை இந்திய அரசாங்கம் தற்போது உறுதி செய்துள்ளது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சில நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பெரிய அளவில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் எவ்வித உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால் உலக நாடுகளில் உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சீனாவுக்கு சிறிதும் தொடர்பில்லாத நாடுகளில் கூட கொரோனா வைரஸ் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இதுவரை இங்கிலாந்தில் 150 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது முதியவர் ஒருவர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா வைரஸ்க்கு பலியான முதல் நபர் அவர்தான் என்று சொல்லப்படுகின்றது. அதனால் நாடு முழுவதும் பரபரப்பான சுழ்நிலை ஏற்பட்டுள்ளது.