ADVERTISEMENT

ஹாங்காங் விவகாரம்.... சீனாவுக்கு எதிராக இங்கிலாந்தின் அதிரடி திட்டம்...

05:44 PM May 30, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு சீனா ஒப்புதல் அளித்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 30 லட்சம் ஹாங்காங் மக்களுக்கு தங்கள் நாட்டில் குடியுரிமை வழங்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.


பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்த ஹாங்காங் சுதந்திர பகுதியாக அறிவிக்கப்பட்ட பின்பு, அது சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஹாங்காங் பகுதியை நிர்வகிக்க நிர்வாக அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு ஆட்சி நடைபெற்று வந்தது. நீண்ட காலமாக நிர்வாக பகுதியான ஹாங்காங்கை தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் திட்டமிட்டுவரும் சீனா அதற்கான பணிகளையும் ஹாங்காங் மக்களின் எதிர்ப்பை மீறி செய்து வருகிறது. குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக ஹாங்காங் மக்கள் போராட்டங்கள் நடத்தி வந்த சூழலில், அந்நகரத்தின் நேரடி அரசியலில் தலையிடும் வகையிலான தேசிய பாதுகாப்பு சட்டத்தை வெள்ளிக்கிழமை நிறைவேற்றியது சீனா. ஹாங்காங் நகரத்தின் சிறப்பு சுயாட்சி மற்றும் சுதந்திரங்களை இந்த சட்டம் பாதிக்கக்கூடும் என உலக நாடுகள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் சீனாவின் இந்த செயலுக்கு பதிலடி தரும் வகையில் ஊதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது இங்கிலாந்து.

ஹாங்காங் இங்கிலாந்து கட்டுப்பாட்டிலிருந்துள்ளதால், அங்குள்ளோரில் பலர் வெளிநாடு வாழ் பிரிட்டிஷாராகவே உள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாடு வாழ் இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்துள்ளனர். எனவே சீனாவின் திட்டத்திற்கு பதிலடியாக 3,50,000 வெளிநாடு வாழ் பாஸ்போர்ட் வைத்திருப்போரின் விசா உரிமைகளை நீட்டிக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்படும் என இங்கிலாந்து வெளியுறவுத்துறை தெரிவித்துள்ள சூழலில், அந்நாட்டில் உள்ள சுமார் 30 லட்சம் பேருக்கு இதன் மூலம் இங்கிலாந்து குடியுரிமை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.


விசா உரிமைகள் ஆறு மாத காலத்திலிருந்து 12 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதால், எதிர்காலத்தில் குடியுரிமை பெறுவதற்கான வழியை இது எளிதாக்கும் என இங்கிலாந்து அரசு தெரிவிக்கிறது. அதேபோல தற்போது ஹாங்காங்கில் வசிக்கும் வெளிநாடு வாழ் மக்களின் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுள்ள எவரையும் இந்த உரிமைகள் உள்ளடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுமார் 30 லட்சம் ஹாங்காங் மக்கள் வருங்காலத்தில் எளிதாக இங்கிலாந்து குடியுரிமை பெற முடியும் எனத் தெரிகிறது. ஹாங்காங் நகரத்தின் மொத்த மக்கள்தொகையே 75 லட்சம் என்ற சூழலில், இங்கிலாந்தின் இந்த அறிவிப்பு சீன அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT