உகாண்டாவில்அதிபர்யோவேரிமுசவேனிதலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்து வந்தவர் சார்லஸ்எங்கோலா. மேலும் இவர் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிஆவார்.
இந்நிலையில் அந்நாட்டின் தலைநகரான கம்பாலா பகுதியில் உள்ளஅவரது வீட்டில் நேற்று காலை அமைச்சர் சார்லஸ்எங்கோலாவுக்கும்அவரது பாதுகாவலர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக்கூறப்படுகிறது. இந்த வாக்குவாதத்தால் மேலும் ஆத்திரம் அடைந்த பாதுகாவலர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால்அமைச்சரைசுட்டுள்ளார்.அங்குத்துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும்பாதுகாப்புக்கு இருந்த மற்றபாதுகாப்பு போலீசார்வீட்டுக்குள்சென்று பார்த்தபோது அமைச்சர் சார்லஸ்எங்கோலாரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில்கிடந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே அமைச்சரைச்சுட்டுக் கொன்ற பாதுகாவலரும் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்துபோலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த சிலமாதங்களாகப்பாதுகாவலருக்குச்சம்பளம் வழங்கப்படாததால் இது குறித்து பாதுகாவலர் அமைச்சரிடம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு அவரை சுட்டுக் கொன்று இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளன. அமைச்சர் ஒருவர் தனதுபாதுகாப்பாளர்ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டு மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.