Advertisment

இந்தியாவின் அண்டை நாட்டினருக்கும் தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்!

UAE

இந்தியாவில் கரோனாபரவல் வேகமாகப் பரவி வருகிறது. இதனையடுத்துநியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள், இந்திய பயணிகள் தங்கள் நாட்டிற்கு வர தடை விதித்துள்ளன.

Advertisment

இந்தநிலையில்ஐக்கிய அரபு அமீரகம், இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம்ஆகிய நாடுகளிலிருந்தும் பயணிகள் தங்கள் நாட்டிற்கு வர தடை விதித்துள்ளது. இந்தியாவைச் சுற்றியுள்ள இந்த நாடுகளிலும், கரோனாபரவல் அதிகரித்து வருவதால் ஐக்கிய அரபு அமீரகம்இந்த அதிரடிநடவடிக்கையை எடுத்துள்ளது.

Advertisment

அதேநேரத்தில், ஐக்கிய அரபுஅமீரகத்தைச் சேர்ந்தவர்கள்தூதரக அதிகாரிகள், அரசு குழுவினர், அமீரகத்தின் கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், தனியார் ஜெட் விமானங்களை வைத்திருக்கும் வர்த்தகர்கள்ஆகியோர் நாட்டிற்குள் வர எந்தத் தடையுமில்லைஎன அறிவித்துள்ள அமீரகம், அவ்வாறு வருபவர்கள் பயணத்திற்கு 48 மணி நேரத்திற்குமுன்பும், அமீரகத்திற்கு வந்த பின்பும் கரோனாபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.

corona virus travel uae
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe