Advertisment

வார இறுதி நாட்களை மாற்றிய ஐக்கிய அரபு அமீரகம்!   

united arab emirates

ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஞாயிறு முதல் வியாழன் வரை வார வேலை நாட்களாகவும், வெள்ளி மற்றும் சனிக்கிழமை வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களாகஇருந்து வந்தது. இந்தநிலையில்ஐக்கிய அரபு அமீரகம், தனது வார வேலை நாட்களைமாற்றியுள்ளது.

Advertisment

அதன்படி. அரசு நிறுவனங்களுக்கு இனி திங்கள் முதல் வெள்ளிக்கிழமை நண்பகல் வரை வார வேலைநாட்களாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியிலிருந்து ஞாயிறு இரவு வரை வார இறுதி நாட்களாகஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வரும் ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ளது.

Advertisment

பணி-வாழ்க்கை சமநிலையை அதிகரிக்கவும், சமூக நல்வாழ்வை மேம்படுத்தவும், அதேநேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொருளாதாரப் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கான செயல்திறனை அதிகரிக்கும் இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரக அரசு ஊடகம் கூறியுள்ளது.

sunday uae
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe