first uae women astronaut

ஐக்கிய அரபு அமீரகம், தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் மட்டுமே செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பியிருந்த நிலையில், சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகமும் இந்த சாதனையை நிகழ்த்தியது. ஐக்கிய அரபு அமீரகம், கடந்த 2020ஆம் ஆண்டு அனுப்பிய விண்கலம், இந்த ஆண்டுபிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது.

Advertisment

இதேபோல் கடந்த சில வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகம், பெண்கள் முன்னேற்றத்திற்கான சீர்திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது. கடந்த வருடம் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும்ஆண் மற்றும் பெண்களுக்கு சமமான ஊதியத்தை வழங்கும் சட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் அமல்படுத்தியது. அமீரகத்தின் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பும் திட்டத்திற்கு, சாரா அல் அமிரி எனும் பெண் அமைச்சர் தலைமை தாங்கினார். இவர்அமீரக அமைச்சரவையில், நவீன அறிவியல் துறை அமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்தநிலையில், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில்விண்வெளிக்குச் செல்லும் முதல் வீராங்கனையை அந்நாடு அறிவித்துள்ளது.நோரா அல்-மெட்ரூஷி என்னும்27 வயதான பெண், ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில்முதல் பெண்ணாக விண்வெளிக்குச் செல்லவுள்ளார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளஅவர், தற்போது பெட்ரோலிய கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

ஐக்கிய அரபு அமீரகம், தாங்கள் எண்ணெய் வளத்தை சார்ந்திருப்பதைக் குறைக்கும் விதமாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பதிறன்களை வளர்த்துக்கொள்ள முயன்று வருகிறது. அதற்கு விண்வெளி திட்டங்களைப் பயன்படுத்தி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், 2024ஆம் ஆண்டுநிலவுக்கு விண்ணூர்தியைஅனுப்பவும், 2117ஆம் ஆண்டில்செவ்வாய் கிரகத்தில் குடியேற்றங்களை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment