femen protest

முதலாம் உலகப்போர் நிரைவடைந்த நூறாவது ஆண்டை கொண்டாடும் விதமாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 70 நாடுகளின் தலைவர்களை கொண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisment

இந்த விழாவிற்காக அதிபர் ட்ரம்ப் சென்றுகொண்டிருக்கும்போது, அவரது காரை மறிக்கும் வகையில் இரண்டு பெண்கள் மேலாடை இல்லாமல் உடலில் வெல்கம் வார் கிரிமினல்ஸ் என்று எழுதப்பட்துடன் ஒடி வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதே வாக்கியத்தை பலகையில் எழுதியும் வந்திருந்தனர்.

Advertisment

இந்நிலையில், எதிர்ப்பு தெரிவித்த இரு பெண்களையும் போலிஸார்கள் கைது செய்துள்ளனர். அதிபர் ட்ரம்ப் கார் முன்னே ஓடிவந்ததால், அவரின் பாதுகப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கும் உலகம் முழுவதும் ஆதரவும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.