
கரோனாதடுப்பூசிகள் பயன்பாட்டிற்குவந்துவிட்டாலும், உலக நாடுகளில் கரோனாதற்போது வேகமெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனி மற்றும் ஸ்காட்லாந்து போன்ற நாடுகளிலும்ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானில் டோக்கியோ மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மலேசியாநாட்டில் கரோனாதொற்றுப் பரவல்அதிகரித்துள்ளதால்,இரண்டு வாரங்கள்ஊரடங்கு அமலுக்குவந்துள்ளது. இந்த ஊரடங்கின் போது விவசாயம், உற்பத்தி போன்ற சிலதுறைகள் மட்டும் இயங்குவதற்குஅனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கைஅறிவித்த மலேசியப் பிரதமர், நிலைமை எச்சரிக்கத்தக்க வகையில் இருப்பதாகவும், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அழுத்தத்தை தற்போதுமலேசிய சுகாதார கட்டமைப்பு சந்தித்துவருகிறது எனவும்கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)