Advertisment

மாடர்னா தடுப்பூசி பாட்டில்களில் உலோகத் துகள்கள்? .. தடுப்பூசி செலுத்திக்கொண்ட இரண்டு பேர் பலி!

moderna

உலகம் முழுவதும் கரோனாதடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. ஜப்பான் நாட்டிலும்பைசர், மாடர்னா உள்ளிட்ட சில தடுப்பூசிகள் மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில்ஸ்பெயினிலிருந்து ஜப்பான் நாட்டிற்கு மூன்று பேட்ச்களாக(BATCH) மாடர்னா தடுப்பூசி பாட்டில்கள் வந்தன. அதில் ஒரு பேட்ச்சில்இருந்த தடுப்பூசி பாட்டில்கள் சிலவற்றில்துகள்கள் கலந்திருப்பதாக புகார் எழுந்தது.

Advertisment

இதனையடுத்துமூன்று பேட்ச்களிலும்இருந்த தடுப்பூசிகளைச் செலுத்துவதைஜப்பான் அரசு, கடந்த வியாழக்கிழமை நிறுத்தியது. மேலும் தடுப்பூசிப் பாட்டில்களில் கலந்திருந்தது உலோக துகள்களாக இருக்கலாம் என ஜப்பானின் சுகாதாரத்துறை அமைச்சகம் சந்தேகிப்பதாக தகவல் வெளியானது.

Advertisment

இதற்கிடையே தடுப்பூசி பாட்டில்களில் துகள்கள் கலந்திருப்பதாக எழுந்த புகார்கள் குறித்து ஐரோப்பிய யூனியனின் மருந்து கட்டுப்பாட்டாளரானஐரோப்பிய மருந்துகள் முகமை விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல் ஸ்பெயின் நாட்டில் மாடர்னா தடுப்பூசி மருந்தை தயாரிக்கும்ரோவிநிறுவனம் இதுகுறித்து விசாரணையைதொடங்கியுள்ளது.

இந்தநிலையில்அந்த தடுப்பூசி பேட்ச்களில்இருந்த பாட்டில்களில் இருந்து தடுப்பூசி டோஸ்களைசெலுத்திக்கொண்டஇருவர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டசில நாட்களிலேயே இறந்துள்ளதாகவும், அதேநேரத்தில்தற்போது வரை மாடர்னா தடுப்பூசிகளால் உயிரழப்புஏற்பட்டதாக எந்தஆதாரமும் இல்லை எனவும் தெரிவித்துள்ள ஜப்பான் அரசு, இருவரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளது.

Japan MODERNA
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe