Skip to main content

மாடர்னா தடுப்பூசி பாட்டில்களில் உலோகத் துகள்கள்? .. தடுப்பூசி செலுத்திக்கொண்ட இரண்டு பேர் பலி!

Published on 28/08/2021 | Edited on 28/08/2021

 

moderna

 

உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. ஜப்பான் நாட்டிலும் பைசர், மாடர்னா உள்ளிட்ட சில தடுப்பூசிகள் மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஸ்பெயினிலிருந்து ஜப்பான் நாட்டிற்கு மூன்று பேட்ச்களாக (BATCH) மாடர்னா தடுப்பூசி பாட்டில்கள் வந்தன. அதில் ஒரு பேட்ச்சில் இருந்த தடுப்பூசி பாட்டில்கள் சிலவற்றில் துகள்கள் கலந்திருப்பதாக புகார் எழுந்தது.

 

இதனையடுத்து மூன்று பேட்ச்களிலும் இருந்த தடுப்பூசிகளைச் செலுத்துவதை ஜப்பான் அரசு, கடந்த வியாழக்கிழமை நிறுத்தியது. மேலும் தடுப்பூசிப் பாட்டில்களில் கலந்திருந்தது உலோக துகள்களாக இருக்கலாம் என ஜப்பானின் சுகாதாரத்துறை அமைச்சகம் சந்தேகிப்பதாக தகவல் வெளியானது.

 

இதற்கிடையே தடுப்பூசி பாட்டில்களில் துகள்கள் கலந்திருப்பதாக எழுந்த புகார்கள் குறித்து ஐரோப்பிய யூனியனின் மருந்து கட்டுப்பாட்டாளரான ஐரோப்பிய மருந்துகள் முகமை விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல் ஸ்பெயின் நாட்டில் மாடர்னா தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் ரோவி நிறுவனம் இதுகுறித்து விசாரணையை தொடங்கியுள்ளது.

 

இந்தநிலையில் அந்த தடுப்பூசி பேட்ச்களில் இருந்த பாட்டில்களில் இருந்து தடுப்பூசி டோஸ்களை செலுத்திக்கொண்ட இருவர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சில நாட்களிலேயே இறந்துள்ளதாகவும், அதேநேரத்தில் தற்போது வரை மாடர்னா தடுப்பூசிகளால் உயிரழப்பு ஏற்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை எனவும் தெரிவித்துள்ள ஜப்பான் அரசு, இருவரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Powerful earthquake in Japan

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. சுமார் 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கின. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி  இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  படுகாயம் அடைந்த 800க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் முன்னெச்சரிக்கையாக இந்தோனேசியா மற்றூம் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமிக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முன்னதாக ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகின. ஜப்பான் நாட்டின் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளொகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. 

Next Story

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Powerful earthquake in Taiwan; Tsunami warning in Japan

தைவானில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கி உள்ளன. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

அதே சமயம் தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமிக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஜப்பான் நாட்டின் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.