Advertisment

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு ஃப்ளூரோனா பாதிப்பு!

flurona

உலகமெங்கும் ஒமிக்ரான்பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் இஸ்ரேலில்ஃப்ளூமற்றும் கரோனாவைரஸ் இணைந்தஃப்ளூரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளநிலையில், தற்போது அமெரிக்காவிலும்ஃப்ளூரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Advertisment

கலிபோர்னியா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களை சேர்ந்த இரு குழந்தைகளுக்கு இந்த ஃப்ளூரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஃப்ளூமற்றும் கரோனாவை கண்டறிய தனி தனி சோதனைகள் தேவைப்பட்டதாகஅமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்தஃப்ளூரோனா பாதிப்பின்அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

Advertisment

அதேநேரத்தில்டெக்சாஸ் மாகாணத்தில்ஃப்ளூரோனா பாதிக்கப்பட்ட குழந்தை வீட்டிலேயே குணமடைந்து வருவதாக அமெரிக்க ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் அண்மையில் தினசரி கரோனாபாதிப்பு 10 லட்சத்தை தாண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

America flurona
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe